ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டரின் 25வது கிளை திறப்பு
கோவையின் முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டரின் 25வது கிளை, கோவை ஹோப்ஸ் பகுதியில் திறக்கப்பட்டது. புதிய கிளையை பிரபல திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார் மற்றும் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், பேச்சாளருமான கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
புதிய மையம் மூலம் ஐவிஎஃப், ஐயூஐ உள்ளிட்ட நவீன கருத்தரிப்பு சிகிச்சைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழந்தைப்பேறு சிகிச்சைகள், கருமுட்டை, விந்தணு மற்றும் கரு உறைவிப்பு, கருத்தரிப்புத் திறன் பாதுகாப்பு, மரபணு சோதனை, லேப்ராஸ்கோப்பி, நன்கொடையாளர் மற்றும் கரு நன்கொடை திட்டங்கள், பாலிகுலர் கண்காணிப்பு, ஓவுலேஷன் இன்டக்ஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டர் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அசோக் குமார், குளோபல் கிளினிக் இயக்குநரும், இணை நிர்வாக இயக்குநருமான டாக்டர் அருணா அசோக் ஆகியோர் கூறுகையில், கோவையில் திறக்கப்பட்டுள்ள புதிய மையம் ஒரே கூரையின் கீழ் பல்வேறு கருத்தரிப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சைத் திட்டங்களை உருவாக்குவதுடன், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட ஐவிஎஃப் தொழில்நுட்பங்களுடன் சிறப்பான கருத்தரிப்பு சிகிச்சை வழங்குவதில் மையம் கவனம் செலுத்துகிறது. கோவையைத் தொடர்ந்து விரைவில் பொள்ளாச்சி மற்றும் சேலத்திலும் புதிய கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0