வங்கி யூபிஐ கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி 60 லட்சம் பரிவர்த்தனை

Oct 3, 2026 - 16:46
 0  2
வங்கி யூபிஐ கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி 60 லட்சம் பரிவர்த்தனை

கோவை தனது வங்கி மற்றும் யு.பி.ஐ., கணக்குகள் மூலம், வேடபட்டியைச் சேர்ந்த 'சிட்டி டிரேடர்ஸ்' நிறுவன உரிமையாளர் கணேஷ்குமார், எட்டு மாதங்களில் ரூ.60 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துள்ளதாகக் கூறி, தீத்திபாளையத்தைச் சேர்ந்த என். வருண்குமார், கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வருண்குமார் கூறியதாவது எனது வங்கி மற்றும் யு.பி.ஐ., கணக்குகளை கணேஷ்குமார் தனது வணிகப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான வங்கி அறிக்கைகள், பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன கடந்த செப். 18ல் கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தேன். அந்த மனு பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை.

கணேஷ்குமார் அளித்த ரூ.4 லட்சம் தொடர்பான புகாரும் தவறானது. அந்தத் தொகையை ஏற்கனவே திருப்பிச் செலுத்திவிட்டேன் பேரூர் போலீசார், பின்னர் தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினர். அங்கு இது சிவில் விவகாரம் எனக் கூறி,இருதரப்பினரிடமும் விளக்கம் பெறப்பட்டது எனது புகாருக்கான சி.எஸ்.ஆர்., நகல் வழங்கப்படவில்லை. சமரசம் செய்து கொண்டதாக எழுதிக் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்தனர் ஆனால் சமரசம் செய்யவில்லை இதற்கிடையே, எனக்கு எதிராக தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சி.எஸ்.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன் பதிவு நேரம் மற்றும் ஸ்டேஷன் டைரி உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த செப். 24ல் கணேஷ்குமார், எனது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிட்டார்.

மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷின் நெருங்கிய நண்பர் எனக் கூறி, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

எனது வங்கி, யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஆதாரங்களைப் பாதுகாப்பதுடன், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0