காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபா கூட்டம்

Oct 3, 2026 - 16:37
 0  2
காந்தி ஜெயந்தி சிறப்பு கிராமசபா கூட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பன்னீர்மடை, நஞ்சுண்டபுரம், தடாகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளித்தனர்.

இதில் அசோகபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் சண்முகம் கிராம சபா கூட்ட பொருள் வாசித்தார். முன்னதாக காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மனுக்களை வழங்கினர்.

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சண்முகா நகர் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் ஈஸ்வரி கிராம சபா கூட்ட பொருள் வாசித்தார். முன்னதாக காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மனுக்களை வழங்கினர்.

பன்னீர் மடை ஊராட்சிக்கு உட்பட்ட தாளியூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் ஒன்றிய பொறியாளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் சதீஷ் கிராமசபா கூட்ட பொருள் வாசித்தார். முன்னதாக காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மனுக்களை வழங்கினர்.

நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கலாவதி மேற்பார்வையில் நடைபெற்றது இதில் ஊராட்சி செயலர் லீலா கிருஷ்ணன் கிராம சபா கூட்டப் பொருள் வாசித்தார். முன்னதாக காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மனுக்களை வழங்கினர்.

சின்ன தடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை சொர்ணம் அம்மாள் மேற்பார்வையில் நடைபெற்றது இதில் கிராம ஊராட்சி செயலர் பிரகாஷ் கிராமசப கூட்ட பொருள் வாசித்தார். முன்னதாக காந்தியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி மனுக்களை வழங்கினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0