மாட்டிறைச்சி விவகாரம்: கோவையில் விஸ்வகர்மா அமைப்புகள் போராட்டம்!
கோவை: சமூக விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சி, விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி மற்றும் அனைத்து இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள், பசு மற்றும் காளை மாடுகள் தமிழர்களின் வாழ்வியலோடும், விவசாயத்தோடும் நீண்டகாலமாக தொடர்புடையவை எனக் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேச்சுகள் அமையக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும், கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள மாட்டிறைச்சிக் கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், விஸ்வகர்மா சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக ஐந்தொழில் நல வாரியம் அமைத்தல், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் உள்ளூர் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி சங்கர் குரு, மாவட்ட செயலாளர் பிரேம், விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் வரதராஜன், ரிக்ரவி, சோமசுந்தரம், விஸ்வநாதன், குருசாமி, நடராஜ், நாச்சிமுத்து, திருப்பூர் மகாலிங்கம், சுரேஷ், பிரேமலதா, வீரமணி, வேலு, மலுமிச்சம்பட்டி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்து முன்னணி மூகாம்பிகை மணி, இந்து மக்கள் கட்சி ஓம்கார் பாலாஜி, சிவசேனா தலைவர் முருகன், ரமேஷ்பாபு, ஹனுமான் சேனா பிரேம்குமார், அகில பாரத அனுமான் சேனா தலைவர் சிட்கோ ராஜேந்திரன், விவேகானந்தர் பேரவை ஜலந்திரன், வடவள்ளி கனகராஜ் மற்றும் நாகசக்தி அம்மன் தியான பீட பக்தர் பேரவை பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0