கோவையில் 500 இளம் வீரர்கள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி!
கோவை குழந்தைகளின் சிந்தனைத்திறன், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்ராக்ட் கிளப் மற்றும் எஸ்.கே. செஸ் அகாடமி சார்பில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
பீளமேட்டில் உள்ள ஓலஜி பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் 7, 10, 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் சுமார் 500 இளம் சதுரங்க வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திறன்பேசி மற்றும் இணையவழி பொழுதுபோக்குகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் சூழலில், அவர்களை டிஜிட்டல் உலகிலிருந்து சற்று விலக்கி, நேரடியாக சிந்தித்து செயல்படும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது. சதுரங்கத்தின் மூலம் முன்கூட்டியே சிந்தித்தல், சூழ்நிலைகளை ஆராய்தல், வியூகம் வகுத்தல் மற்றும் சுயமாக முடிவெடுத்தல் உள்ளிட்ட திறன்களை குழந்தைகள் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு பெற்றனர்.
இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் 20 கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக விளையாடிய 5 மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனைத்திறனை வளர்ப்பதுடன், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை உருவாக்கும் சிறந்த முயற்சியாக அமைந்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0