பள்ளி கல்வித்துறை சார்பாக 19 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு ஹேண்ட்பால் அணிக்கான வீரர்கள் தேர்வு

Sep 29, 2026 - 16:21
 0  6
பள்ளி கல்வித்துறை சார்பாக 19 வயதிற்கு உட்பட்ட தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு ஹேண்ட்பால் அணிக்கான வீரர்கள் தேர்வு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சார்பில் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளில் பங்கேற்கும் 19 வயதிற்கு உட்பட்ட தமிழக ஹேண்ட்பால் அணிக்கான மாணவர்களுக்கு தெரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் 16 வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு தமிழக அணி சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளில் பங்கேற்கும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஹேண்ட் பால் தெரிவு போட்டிகள் கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில அளவில் இருந்து 8 மண்டலத்தைச் சார்ந்த மாணவர்கள் சுமார் 98 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு போட்டிகள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் சந்தோஷ் மற்றும் உப தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் பங்கேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தேர்வு போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் செய்திருந்தார். இதற்கான அனைத்து உதவிகளையும் கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சிறப்பாக செய்திருந்தது. 

இதில் 1500 மீட்டர் ஓட்டம், பந்து வீச்சு, விளையாட்டு, கீப்பிங் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் லூதியானாவில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0