வரலாறு பேசும் மணியகாரன்பாளையம்! 226 ஆண்டுகால சுவடுகள் நூலாக வெளியீடு

Sep 27, 2026 - 20:49
 0  2
வரலாறு பேசும் மணியகாரன்பாளையம்! 226 ஆண்டுகால சுவடுகள் நூலாக வெளியீடு
வரலாறு பேசும் மணியகாரன்பாளையம்! 226 ஆண்டுகால சுவடுகள் நூலாக வெளியீடு
வரலாறு பேசும் மணியகாரன்பாளையம்! 226 ஆண்டுகால சுவடுகள் நூலாக வெளியீடு

கோவை கணபதி மணியகாரன்பாளையம் பகுதியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மு. கிருஷ்ணசாமி எழுதிய “கோவை – கணபதி மணியகாரன்பாளையம் அன்றும் இன்றும் – 1800 முதல் 2026” என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா, கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நடராஜ் கவுண்டர், வேலுமணி நாயுடு, பழனிச்சாமிக்கவுண்டர், சண்முகசுந்தரம், முத்துசாமி உடையார், ரகுபதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சி. நடராஜ், ஆறுக்குட்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நூலாசிரியர் மு. கிருஷ்ணசாமி வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆடிட்டர் அர்ஜுனன்ராஜ், நூலை வெளியிட்டார்.

நூலின் முதல் பிரதிகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் நித்தியானந்தம், அறிவழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நூல் மதிப்புரை நிகழ்ச்சியில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், பி.ஏ. கல்விக் குழுமத் தலைவர் அப்புக்குட்டி, செல்வம் ஏஜென்சிஸ் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலின் சிறப்புகளையும், மணியகாரன்பாளையம் பகுதியின் வளர்ச்சி குறித்தும் பேசினர்.

மேலும் மனிதநேயர் கோவை இரமேஷ், பிரபு, அரிமா சுப்பையன், அரிமா கமலாபிரஸ் ராஜு, வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சிவசாமி தமிழன், சிவஞானம், மனோகரன், ஜானகி சம்பத், சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக வித்வான் செல்வராஜ் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியை நடராஜ் ஆசிரியர் தொகுத்து வழங்கினார். செல்வராஜ் நன்றியுரை வழங்கினார்.

1800-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான மணியகாரன்பாளையத்தின் வரலாற்றுச் சுவடுகள், பழமையான கோயில்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.

மணியகாரன்பாளையத்தின் கடந்த கால வரலாற்றையும், வளர்ச்சிப் பாதையையும் பதிவு செய்யும் இந்த நூல், அப்பகுதியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முக்கிய ஆவணமாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0