செப் 25 முதல் 27 வரை RM Expo வணிகதிருவிழா

Sep 20, 2026 - 09:08
 0  3
செப் 25 முதல் 27 வரை RM Expo வணிகதிருவிழா

கோயம்புத்தூரில் வரும் செப்டம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் “R.M. Expo” என்ற பிரம்மாண்ட வணிகத் திருவிழா காளப்பட்டி சாலை கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஏற்பாட்டாளர்கள் செந்தில்குமார் மற்றும் மகேஸ்வரி செந்தில்குமார் கூறுகையில் பல்வேறு தொழில் மற்றும் வணிகங்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த எக்ஸ்போ நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த எக்ஸ்போவில் சிறுதொழில் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்குதல், வணிகர்களுக்கு Branding, Sales, Customer Connection வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பொதுமக்களுக்கு ஒரே இடத்தில் பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கோயம்புத்தூர் தொழில் முனைவோரின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், புதிய தொழில் வாய்ப்புகள், நெட்வொர்க்கிங் மற்றும் Business Opportunity ஆகியவற்றை உருவாக்கும் வகையில் நிகழ்ச்சி அமைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க விரும்பும் வணிகர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக R.M. Expo நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் செந்தில்குமார் மற்றும் மகேஸ்வரி செந்தில்குமார் ஆகியோர் கூறினர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0