“ஈட்டியுடன் கம்பீரமாக களமிறங்கிய வீரர்!
கோவையில் ஈட்டி எறிதல் வீரர் நவீன சிலை திறப்பு!
VOC ரவுண்டானாவில் கம்பீரமாக அமைந்த சிலை – அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார்!
கோவை மாநகரின் முக்கியப் பகுதியான VOC ரவுண்டானாவில், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும், இளைய தலைமுறையினர் மத்தியில் ஈட்டி எறிதல் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், Address Developers Private Limited சார்பில் அமைக்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரரின் நவீன சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
புதிய சிலையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திறந்து வைத்தார் விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
நகரின் முக்கியப் பகுதியில் விளையாட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, இளம் தலைமுறையினருக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், நகரின் வளர்ச்சி மற்றும் அழகுபடுத்துதல் பணிகளில் Address Developers Private Limited நிறுவனத்தின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.
கோயம்புத்தூரின் முன்னணி நிகழ்வு மேலாண்மை நிறுவனமான Sai Abimaan Ads and Events நிறுவனர் தேன்மொழி தினேஷ்குமார் ஏற்பாட்டில் விழா சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
விழாவில் அரசு அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள், நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0