“குழந்தைகளுக்காக ஓடுவோம்… உயிர்களை காப்போம்!” ❤️ கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’

Sep 15, 2026 - 18:49
 0  2
“குழந்தைகளுக்காக ஓடுவோம்… உயிர்களை காப்போம்!” ❤️ கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’
“குழந்தைகளுக்காக ஓடுவோம்… உயிர்களை காப்போம்!” ❤️ கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’

குழந்தைகளின் இருதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோய்க்கு உதவும் வகையில்… கோவையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான்!

கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில், ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் ஓட்டத்தின் 4-வது பதிப்பு, வரும் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

குழந்தைகளின் இருதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை உதவி வழங்கும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்படுகிறது பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், செப்டம்பர் 27-ம் தேதி காலை 5.30 மணிக்கு மாரத்தான் தொடங்குகிறது.

இதில் 1 மற்றும் 3 கிலோமீட்டர் ஓட்டங்களில் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.

12 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும்…

18 முதல் 39 வயது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டர் ஓட்டமும் நடைபெற உள்ளது.

5 மற்றும் 10 கிலோமீட்டர் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த மாரத்தான் போட்டிக்கு கோவை மாவட்ட தடகள சங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்று, அதன் மூலம் 2 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிதி, இருதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளும் இந்த ஆண்டும் மாரத்தானில் பங்கேற்க உள்ளனர்.

குழந்தைகளின் நலனுக்காக நடைபெறும் இந்த சமூகநல மாரத்தானில், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0