பக்தியில் திளைத்த கோவை! சிவசேனா சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா

Sep 15, 2026 - 14:46
 0  4
பக்தியில் திளைத்த கோவை! சிவசேனா சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா
பக்தியில் திளைத்த கோவை! சிவசேனா சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா
பக்தியில் திளைத்த கோவை! சிவசேனா சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா
பக்தியில் திளைத்த கோவை! சிவசேனா சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் சிவசேனா கட்சியின் கோவை மாவட்ட தலைமை சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பக்தி மற்றும் உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் ஆண்டுதோறும் பக்தி பெருக்குடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் சிவசேனா கட்சியின் கோவை மாவட்ட தலைமை சார்பில் சிறப்பு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ஹரி பிரசாத் தலைமையில் நடைபெற்ற விழா, விநாயகர் பிரதிஷ்டை மற்றும் யாக வேள்வியுடன் சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

விழாவில், சிவசேனா கட்சி தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் மா. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் கோவை மாவட்ட தலைவர் நாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் செந்தில், கோவை மண்டல தலைவர் ஹரிஹரன், கோவை மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கராஜ், கிருஷ்ணன், மாவட்ட தலைவர் மருது, மாவட்ட செயலாளர் புகழரசன், துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிவசேனா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு அருள் பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒற்றுமை, பக்தி, ஆன்மிகம் ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இவ்விழா, கோவையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0