கொழுக்கட்டை முதல் கலாச்சார கலைநிகழ்ச்சிகள் வரை… கோவை அமிர்தா கல்லூரியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி!

Sep 11, 2026 - 21:48
 0  6

கோவை K.N.G. புதூர் பிரிவு, தடாகம் சாலையில் அமைந்துள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ஆர். சுரேஷ் குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஹோட்டல் ஸோன் பை தி பார்க், கோவை நிறுவனத்தின் CDP செஃப் சச்சின் கலந்து கொண்டார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களின் சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் கொழுக்கட்டை தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது படைப்பாற்றல் மற்றும் சமையல் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும், மாணவர்களின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் HOD டி. கார்த்திகேசவன், நிர்வாக அலுவலர் திருமதி எம். புவனேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய பண்டிகையை மாணவர்களுடன் இணைந்து கொண்டாடியதன் மூலம், இந்திய கலாச்சாரம், பாரம்பரிய விழாக்கள் மற்றும் உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழா அமைந்தது. மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நிறைவடைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0