பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் 31-ம் ஆண்டு விழா!
கோவை சௌரிபாளையம், உடையாம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வரும் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் 31-ம் ஆண்டு விழா, சௌரிபாளையம் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் எம். கௌரிசங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில், இலட்சியத் துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஷ்குமார் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, அறக்கட்டளையின் ஆண்டறிக்கை காணொளி மூலம் வெளியிடப்பட்டது.
ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடம் நிலவேம்பு சித்தர் சண்முகசுந்தரபாபு ஜி சுவாமிகள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிறுவனர் முகமது ரஃபி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், கிரைண்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், வாக்கிங் ஸ்டிக்குகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கண்பார்வையற்ற முதியவருக்கு கட்டில், மெத்தை மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் 25-க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகளுக்குப் புத்தாடைகள், நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் தீபாவளிப் பரிசாக தலா ரூ.100 வழங்கப்பட்டது.
அன்னை ஆட்டோ கேரேஜ் நிறுவனர் சண்முகம், கம்பன் கலைக்கூடத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், எஃப்.பி. கேக்ஸ் சிவகுமார், அவிநாசி மலர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் இணைந்து 55-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய தீபாவளிப் பரிசுத் தொகுப்புகளை வழங்கினர். கோவை வினோ டெக்ஸ் நிறுவனர் பாஸ்கர் ஏழை மக்களுக்குப் புத்தாடைகளை வழங்கினார்.
மேலும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், கண்பார்வையற்ற முதியவர், வயதான மூதாட்டி, புற்றுநோயாளி, ஏழை மாணவ, மாணவிகள் மற்றும் கணவரை இழந்த பெண்மணி உள்ளிட்டோருக்கு மாதாந்திர நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது.
கோவை YAAZH HOMES நிறுவனர் அம்சகுமார் சார்பில் சமூக சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சமூக சேவையாளர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் கோவை திருக்குறள் ஆய்வுக் கழக நிறுவனர் முனைவர் மு.க. அன்வர் பாஷா, அண்ணமாஸ் அன்னம் கேட்டரிங் கார்னர் நிறுவனர் ஜே.ஜே. இன்னசென்ட், பாலம் அமைப்பின் நிறுவனர் பாலம் பாபு, சமூக நல ஆர்வலர் துரைமுருகன், ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோவில் நிர்வாகிகள் தனராஜ், ரங்கநாதன், கிருஷ்ணராஜ், பட்டியப்பன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், அக்குபஞ்சர் மலர் மருத்துவர் ஜோதிமணி, பாலர் பூங்கா ஒருங்கிணைப்பாளர் ஹெயில் மேரி, கோவை காலேஜ் ஜெராக்ஸ் நிறுவனர் கவிதா மூர்த்தி, அப்சரா பிரைடல் கலெக்ஷன் நிறுவனர் ரூபினா, ஷர்மிளா பானு, அம்மன் ஆட்டோ கேரேஜ் நிறுவனர் நாகலட்சுமி சண்முகம், மீனா பாரதி, விஜயகலா துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய புத்தக நிலையத்தைச் சேர்ந்த ஜக்கரியா, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மைய நிறுவனர் ஸ்டீபன்ராஜ், தமிழ்நாடு மீட்டர் ஆட்டோவைச் சேர்ந்த இஸ்மாயில் பாட்ஷா, பவானி பாரதி அறக்கட்டளை நிறுவனர் பாரதிராஜா, 3-S ஃபயர் அண்ட் சேஃப்டி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனர் ஆனந்தன், ஸ்ரீ பாபா முதியோர் அறக்கட்டளையைச் சேர்ந்த கனகராஜன், நூல் காஞ்சி இலக்கியப் பேரவைத் தலைவர் சோமசுந்தரம், கிரீம்ஃபால்ஸ் ஐஸ்கிரீம்ஸ் நிறுவனர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ் பாரதி இயற்கை உணவகம் மற்றும் வேதிகா தேநீரகம் நிறுவனர் கருணாநிதி, சுரேஷ் ஆகியோர் அறுசுவை உணவு வழங்கினர். உயிர் அமைப்பு மற்றும் கோவை மாநகர காவல்துறை இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “நான் உயிர் காவலன்” என்ற உறுதிமொழியை டாக்டர் எம். கௌரிசங்கர், உயிர் அமைப்பைச் சேர்ந்த ராம் வினோத் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
காந்திநகர் நாகராஜ் நன்றியுரை வழங்கினார். தமிழரசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பாரத மாதா, சுஜன், இலட்சியத் துளி மக்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் ரெக்ஸ், ரஞ்சித், அந்தோணி, அசோக், அஸ்வின் மற்றும் கோவை அறம் அமைப்பைச் சேர்ந்த சிவராம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்குவதுடன், மத நல்லிணக்கம், சமூக சேவை மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வையும் முன்னிறுத்தும் வகையில் விழா நடைபெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0