அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ஜப்பானியக் கலாசாரத் திருவிழா ‘BUNKASAI’!

Oct 12, 2026 - 17:09
 0  3
அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் ஜப்பானியக் கலாசாரத் திருவிழா ‘BUNKASAI’!

கோவை மாவட்டம், செட்டியக்காபாளையத்தில் உள்ள அர்ஜூன் பொறியியல் கல்லூரியில் (தன்னாட்சி) ஜப்பானியக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ‘BUNKASAI – A Japanese Cultural Festival’ என்ற கலாசாரத் திருவிழா நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜானகி மனோகர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலாளர் முனைவர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

ஜப்பான் அறக்கட்டளையின் மூத்த ஜப்பானிய மொழி ஆலோசகர் மகோட்டோ சைட்டோ, மொழி ஆலோசகர் சயாகா ஆஓகி, ஓரிகாமி கலை நிபுணர் யாகிமோவ் ஃபிலிப், நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீலி குராஜம் ஆகியோர் பங்கேற்று, ஜப்பானிய மொழி, பாரம்பரியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விளக்கினர்.

விழாவில் ஜப்பானியக் கலாசாரக் கண்காட்சிகள், கலை அரங்குகள் இடம்பெற்றன. காகிதத்தை மடித்து பல்வேறு வடிவங்களை உருவாக்கும் ஓரிகாமி கலையின் செயல்விளக்கம் மாணவர்களைக் கவர்ந்தது.

மேலும், ஜப்பானில் உள்ள வேலைவாய்ப்புகள், அங்கு பணிபுரியத் தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் திறன்கள், ஜப்பானிய மொழியைக் கற்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா–ஜப்பான் இடையிலான கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாசார உறவுகளின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டது நிகழ்ச்சியை ஆங்கிலத் துறைப் பேராசிரியர் ரேஷ்மா தொகுத்து வழங்கினார். நிறைவில், இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் பிரபா நன்றியுரை வழங்கினார்.

மாணவர்கள் ஜப்பானியக் கலாசாரத்தை நேரடியாக அறிந்துகொள்ளவும், சர்வதேச வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வைப் பெறவும் இத்திருவிழா பயனுள்ளதாக அமைந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0