புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள்!
கோவை, புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சடங்கு என்றால், முதியோர்களுக்கு உதவுவது தர்மம் என்ற நோக்கில், சத்தியமே ஜெயதே நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அனுமான் சேனா நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் ஜி நடத்தி வரும் ஸ்ரீ ஆஞ்சநேயா அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு பெட்ஷீட், துண்டு, பெர்முடாஸ், நைட்டி, வாளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முதியோர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்றும், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை முதியோர் இல்லங்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் அறக்கட்டளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
முதியோர் இல்லத்தின் முகவரி: கோவை – பொள்ளாச்சி சாலையில், தாமரைக்குளம் அருகே உள்ள சென்றாயன்பாளையம் கிராமம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0