“தாய்மாமன் சீர் மோதிரம் யார் செய்ய வேண்டும்?” – பொற்கொல்லர்களின் அதிரடி கோரிக்கை!

Sep 4, 2026 - 14:06
 0  3
“தாய்மாமன் சீர் மோதிரம் யார் செய்ய வேண்டும்?” – பொற்கொல்லர்களின் அதிரடி கோரிக்கை!
“தாய்மாமன் சீர் மோதிரம் யார் செய்ய வேண்டும்?” – பொற்கொல்லர்களின் அதிரடி கோரிக்கை!

கோவையில் தமிழ்நாடு–புதுச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு சார்பில்,தமிழக அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீர் தங்க மோதிரம் திட்டத்தில் உள்ளூர் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஜகத்குரு நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய பாபுஜி சுவாமிகள், தங்க நகை தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்பை இழந்து வரும் தொழிலாளர்கள் கடன் தொல்லையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூர் தங்க நகைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ முடியும் என்றார்.

மேலும், தாய்மாமன் சீர் திட்டத்திற்கான தங்க மோதிரங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காமல், உள்ளூர் விஸ்வகர்மா பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

நெசவுத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதைப் போன்று, தங்க நகை கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மோதிரம் தயாரிக்கும் பணியை உள்ளூர் விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து பொற்கொல்லர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ரிக் ரவி, மாநில நிர்வாகக் குழுத் தலைவர் வரதராஜன், மாநிலத் துணைத் தலைவர் கமலஹாசன், மாவட்டத் தலைவர் நகாஸ் விஸ்வநாதன், மாநில அமைப்புச் செயலாளர் தில்லை நகர் நாச்சிமுத்து, மாநில இளைஞரணி தலைவர் பிரகாஷ், ஐ.எஸ். மணி

மீட்டிங் மஹால் தலைவர் கல்லுப்பட்டி சேகர், ஆர்.டி.எம். சங்கத் தலைவர், பார்த்திபனூர் சங்கத் தலைவர் சிங்கராஜ், கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ரகு தண்டபாணி, தம்பி ஜுவல்லரி மனோஜ்,உள்ளூர் தெலுங்கு விஸ்வகர்மா சங்கத் துணைத் தலைவர் குருசாமி, பிரகாஷ்,உள்ளூர் பாரம்பரிய தமிழ் விஸ்வகர்மா சங்கத்தைச் சேர்ந்த கெம்பட்டி காலனி நடராஜ்,சரவணன், காளம்பாளையம் விஸ்வகர்மா சங்கத் தலைவர் ரங்கராஜ், விஸ்வகர்மா ஐங்குலத்தூர் மக்கள் சங்கத்தைச் சேர்ந்த காளிராஜ் விஸ்வஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள்,ஹரிஓம் இந்து சேவா சங்கப் பொறுப்பாளர் திருக்குமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0